செய்தி25 May at 9:51 amமே 23-ம் தேதி அதிகாலை, அருள்மிகு அவினாசிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி சிலைகள், நாயன்மார்கள் சிலைகள் உடைத்து, கோபுரங்களும் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்நிலையில் மனநிலை சரியில்லாத ஒருவர் இந்த பாவச்செயலை செய்தார் என்று காவல்துறை கூறுவது நம்பத்தகுந்ததாக இல்லை. இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும். உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இந்து விரோத போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் திமுக அரசு இந்துக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை உணரும் என்று நம்புகிறேன்.
செய்தி26 Apr at 6:34 amதமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்கிற அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீரழிந்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் – கனிமவளக் கொள்கையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்தி25 Apr at 6:55 amமுதலமைச்சரை காப்பாற்ற திமுகவின் கூட்டணி கட்சிகள் முயற்சிப்பது ஏன்? திமுக அரசை வெளி சக்திகள் இயக்குகிறதா?
செய்தி20 May 2021கோவையில் கொரோனா நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலினை சந்தித்தார் வானதி சீனிவாசன் M.L.A