

வானதி சீனிவாசன்
- மாநில துணைத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு
- சமூக ஆர்வலர்
- நிறுவனர் – தாமரை சக்தி
- நிறுவனர் – கோவை மக்கள் சேவை மையம்
- தலைவர் – புதிய இந்தியா மன்றம்
செடியிலிருந்து கிளர்ந்த இளங்கன்றாய் இருப்பது வரம். அவ்வரத்தை போலே திரு.கந்தசாமி – திருமதி.பூவாத்தாள் தம்பதியருக்கு மகளாய் பிறந்தவர் திருமதி.வானதி சீனிவாசன். பாரம்பரியமிக்க குடும்பம், விவசாயத்தை தெய்வீகமாய் மதிக்கும் வம்சம். கோவையில் புகழ்பெற்ற மருதமலையின் மலைச்சாரலின் அருகே அழகாய் விரிந்திருக்கும் உலியம்பாளையம் கிராமம் இவருடையது. மூத்த சகோதரியெனும் பெருமை மிகு உரிமையோடு குடும்பபொறுப்புகளை ஏற்றார்.
கோவையின் தொண்டமுத்தூர் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் தொடக்க கல்வி மற்றும் உயர் கல்வியை முடித்தார். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் பள்ளியின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்தார். பேச்சு, நாடகம், வினா விடை, கட்டுரை வரைதல், என அனைத்து களங்களிலும் முத்திரை மாணவியாக விளங்கியது இவரின் தனி சிறப்பு. இவர், பள்ளியின் வாலிபால் மற்றும் கோ-கோ அணிகளின் தலைவியாகவும் அங்கம் வகித்தார்.
பள்ளி கல்வியின் தொடர்ச்சியாய், கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் வேதியியலில் இளநிலை பட்டபடிப்பை முடித்தார். இந்த படிப்பின் போது கல்லூரியின் சிறந்த மாணவியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் அடுத்தகட்டமாய் சென்னையிலுள்ள புகழ்பெற்ற டாக்டர். அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் தன் சட்ட படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து “சர்வதேச அரசியலமைப்பு” பிரிவில் தன் முதுநிலை சட்ட பட்டத்தை பெருமைமிகு மெட்ராஸ் பல்கலைகழகத்தில் முடித்தார்.
1983-ஆம் ஆண்டு, மூத்த வழக்கறிஞர் திரு.ஞானதேசிகன் (முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்) அவர்களின் கீழ் தன்னுடைய வழக்கறிஞர் வாழ்வை துவங்கினார். சிறிது கால புது தில்லி உச்ச நீதிமன்ற பயிற்சிக்கு பின், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக தற்போது பணியாற்றி வருகிறார்.
2010-ஆம் ஆண்டு அமேரிக்காவில் நடைபெற்ற “இளைய தலைவர்கள் மாநாட்டிற்கு” சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர்.
மகுடத்திற்க்கு வைரம் வைத்தார் போல் அவர் வகித்து வந்த மற்றும் வகித்து வரும் பொறுப்புகள்:
-
- அரசு வழக்கறிஞர் – தெற்கு இரயில்வே மற்றும் மத்திய அரசு
மாநில துணை செயலாளர் – அகில் பாரத்திய வித்தியார்த்தி பரிஷத்(ABVP)
அறிவுரை குழு உறுப்பினராக – சினிமா தணிக்கை குழு, தமிழ் நாடு
மாநில பொதுச்செயலாளர் – மகளிர் அணி, பா.ஜ.க தமிழ்நாடு
மாநில செயலாளர் – பா.ஜ.க தமிழ்நாடு
மாநில துணை தலைவர் – பா.ஜ.க தமிழ்நாடு
மாநில பொதுச்செயலாளர் – பா.ஜ.க தமிழ்நாடு
அறக்கட்டளை நிறுவனர் – தாமரை சக்தி(பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் NGO)
திரு. சீனிவாசன், வானதி அவர்களின் உற்ற துணையாய் வாழ்வில் கரம் கோர்ட்தவர். தொழில் முறையில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர். இவர் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசின் துணை சட்ட அலோசகராக பணியாற்றி இருக்கிறார். திரு.வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் புது டில்லி தேசிய இளைஞர் கமிஷன் உறுப்பினராக இருந்தவர். உச்ச நீதிமன்றத்தின் வழக்குறைஞர் திரு.பிரசாந்த் பூஷன் அவர்களின் கீழ் பயிற்சி பெற்றவர். வட தமிழகத்தின் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில செயலராக பணியாற்றியவர்.
ஆதர்ஷ் வி. சீனிவாசன், திரு & திருமதி சீனிவாசன் தம்பதியரின் மூத்த மகன். காரத்தே கலையில் “பிளாக் பெல்ட்” பெற்றவர். புனித பீட்ஸில் பயிற்சி பெற்று வரும் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீர்ர். தற்சமயம் கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார்.
கைலாஷ்.வி. சீனிவாசன் திரு & திருமதி சீனிவாசன் தம்பதியரின் இளைய மகன். வளர்ந்து வரும் கிரிக்கெட் விளையாட்டு வீரர். கராத்தே மற்றும் டிரம்ஸ் கலையில் வெற்றியை பதிக்க முயன்றுவருபவர். வித்யா மந்திர் பள்ளியில் மேனிலை பள்ளி படிப்பு படித்து வருகிறார்.