சாராயக்கடைகள் காலை 9 மணிக்கு துவக்கப்பட்டது முதல் வாகன விபத்துக்கள் மூலம் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கி விட்டது. இது பெருந்தொற்றை கட்டுபடுத்த முயற்சி செய்யும் மருத்துவதுறை மீது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்குகிறது.
சென்னையில் மட்டும் 2 நாள்களில் 11,000 சாலை விதி மீறல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பகுதி நேர ஊரடங்கு கண்காணிப்பு, சட்ட ஒழுங்கு கண்காணிப்பிலும் மது அருந்துபவர்களால் பெரும் அழுத்தம் ஏற்படுகிறது. இதையும் கவனத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாகவேனும் மூட வேண்டும். அல்லது மது விற்பனை நேரத்தை 3 மணி நேரமாக குறைக்க வேண்டும்.